ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய தீவுப்பகுதியான ஹொக்கைடோ பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்க ஏற்பட்டுள்ளது. நிலநடுக்க அதிர்வைத் தொடர்ந்து சுனாமி ஏற்படவாய்ப்பு இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் கடல் பகுதியில் இருந்து 60 கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்வு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகள் நிலநடுக்க ஏற்படுகிறது. மேலும் இன்று துருக்கி மத்திய பகுதியில் நிலநடுக்க ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் இருநாடுகளும் பெரும் சேதத்தை கண்டுள்ளனர். இதுவரை வெளிவந்த தகவலில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.