இந்தோனேஷியாதீவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியதால் மக்கள் அச்சம்

இயற்கை பேரிடர் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் நிகழ்வுகள்

இந்தோனேசியாவின் தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் உள்ள தனிம்பார் தீவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் 39 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நேரிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் கடந்த 10ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென் மேற்கே கடலுக்கடியில் 22 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்; சிலர் காயமடைந்தனர். சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *