கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு – மே 10ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
கர்நாடக தேர்தல்: சில முக்கிய தேதிகள்:
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் ஏப் 13
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஏப் 20
வேட்புமனு பரிசீலனை ஏப் 21
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஏப் 24
வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மே 10
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே 13
இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித் தனியாக களமிறங்குகின்றன. 3 கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளன. மஜத, ஆம் ஆத்மி, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அவர்களை முன்னிறுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன‌. இருப்பினும் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையே தான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *