ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு அடுத்த வாரம் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வரும் திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. தண்டனை பெற்ற எம்எல்ஏக்கள், எம்பிகள் பதவிகள் உடனடியாக தகுதி இழக்க வழிவகை செய்யும் சட்டத்திற்கு எதிராக உச்சிநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கின் விசாரனை, அவசர வழக்காக திங்கட்கிழமை உச்சநீதி மன்றம் விசாரிக்கிறது.
இதனிடையே மே மாதம் 24 ஆம் தேதியுடன் கர்நாடக சட்டமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்த இறுதி அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தும் வகையில் தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.