தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தி தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இல்லந்தோறும் அளவிடப்படும் மின்சாரக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. மின்சாரக் கட்டணம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.
கடந்த அதிமுக ஆட்சியில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க ஆணைப் பிறப்பிக்கப்பட்டது.
மின்சாரக் கட்டணம் உயர்வால் இல்லங்களுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும், ரத்து செய்யப்படாது. மின்சாரக் கட்டண உயர்வு விவரங்கள் கீழ்வருமாறு.
முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது.
101 – 200 யூனிட் 170லிருந்து 225 ரூபாயாகவும்.
201 – 300 யூனிட் 530லிருந்து 675 ரூபாயாகவும்,
301 – 400 யூனிட் 830லிருந்து 1,125 ரூபாயாகவும்,
401 – 500 யூனிட் 1,130லிருந்து 1,725 ரூபாயாகவும்
501 – 600 யூனிட் 2,446லிருந்து 2,756 ரூபாயாகவும்
601 – 700 யூனிட் 3,110லிருந்து 3,660 ரூபாயாகவும்
701 – 800 யூனிட் 3,760லிருந்து 4,550 ரூபாயாகவும்
801 – 900 யூனிட் 4,420லிருந்து 5,550 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது.
குடிசை, விவசாயம் விசைத்தறி, கைத்தறி மற்றும் வழிபாட்டுத் தளங்களுக்கு மானியத்துடன் வழங்கப்படும் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.