தனக்கென சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை எனவும், நண்பர்களின் வீடுகளில் தான் தங்கி வருவதாகவும் உலகின் முதன்மை பணக்காரரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தை உருவாக்கியவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இயங்கி வரும் மஸ்க் சமீபத்தில் டிவிட்டரை விலை பேசி இருந்தார். ஆன போதும் அவருக்கு சொந்தமாக வீடு இல்லை என்று கூறி வருவதுஆச்சரியம் அளிக்கிறது.
“இப்போதைக்கு எனக்கென சொந்தமாக இடம் கூட இல்லை. நான் எனது நண்பர்களின் வீடுகளில்தான் தங்கி வருகிறேன். டெஸ்லா நிறுவன பணி நிமித்தமாக நான் சென்றாலும், அந்த இடங்களில் அமைந்துள்ள நண்பர்களின் மாற்று அறையில் தங்குவேன்.
எனது தனிப்பட்ட செலவுக்காக ஆண்டுதோறும் பில்லியன் கணக்கிலான டாலர்கள் செலவு செய்தால், எனக்கு அது சிக்கலை கொடுக்கலாம். ஆனால், அதற்காக நான் இப்படி செய்யவில்லை. நான் சொந்தமாக தனி ஜெட் விமானம் வைத்துள்ளேன். ஆனால், அது இல்லையெனில் எனது வேலைகள் நடக்காது. இருந்தாலும் என்னிடம் நிறைய சொத்துகள் உள்ளது” எனவும் வீடியோ பேட்டி ஒன்றில் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.