உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அதிக சொத்து மதிப்பை இழந்தவர் என சாதனையுடன் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளார்.
பஉலகின் பிரபல பணக்காரர்களில ஒருவரா எலான் மஸ்க். டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து பின்னர் பல்வேறு பிரச்னைகளுக்கிடையே டுவிட்டரை வாங்கினார். இதற்காக டெஸ்லாவின் பெருமளவு பங்குகளை விற்றார். இவரின் செயலால் டெஸ்லா நிறுவனத்தில் முதலீடு செய்த அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டுப் பெரும் சோதனை காலமாகவே இருந்தது.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் பல ஆண்டுகளின் முயற்சியின் கீழ் எலான் மஸ்க் சொத்து மதிப்பு யாரும் எட்ட முடியாத அளவிற்கு பல பில்லியின் டாலர் சொத்து மதிப்பீட்டை இழந்தார். 2000ஆவது ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப முதலீட்டாளர் மசாயோசி 58.6 பில்லியன் டாலர்களை இழந்திருந்ததே கின்னஸ் சாதனையாக இருந்துள்ளது. எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பானது 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 320 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், இது 2023ஆம் ஆண்டு ஜனவரியில் 137 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது. இதனால் அதிக சொத்து மதிப்பை இழந்தவர் என்ற சாதனையுடன் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுவிட்டார்.