தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் விநியோகம்; ஒரு வாரத்தில் ஒரு லட்த்திற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் பதிவு

இந்தியா உயர்கல்வி கடந்த நிகழ்ச்சிகள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

கடந்த 6ம் தேதி தொடங்கிய பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவில் இதுவரை 1,00,699 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 56,044 மாணவர்கள் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தியும், 27,755 மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பதை பூர்த்தி செய்துள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-ம் தேதி தொடங்கியது. இதுவரை 1,00,699 பதிவு செய்துள்ளனர். இதில் 56,044 மாணவர்கள் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தியும், 27,755 மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பதை பூர்த்தி செய்துள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6-ம் தேதியுடன்நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *