இனி இதெல்லாம் பிரச்சினை இல்லை…

மற்றவை
business directory in tamil

இனி இதெல்லாம் பிரச்சினை இல்லை…

என்னபா பண்ண வாய்க்கு ருசியா சாப்பிட கூட முடியல 60 ஐ நெருங்கும் ஒரு முதியவரின் ஆதங்கம் இது

வாழ்க்கையில் நாம் தடுக்க முடியாத சில விஷயங்கள் இருக்கு. அதுல ஒண்ணு தான் வயசாகுறது. இது யாராலயும்தடுக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது

வயதான எல்லோருமே மீண்டும் சின்ன பிள்ளை …இந்த பாடல் வரிகளில் இருக்கின்ற சந்தோஷம் பெரும்பாலும்வாழ்க்கையில் இருக்குறது இல்லை.

முதுமை

பொரும்பாலனோருக்கு சாபம் தான். என்ன பண்ண எப்படி இருந்தாலும் அதை கடந்து போய் தானே ஆகணும் ???

பொதுவாக வயசானாலே நிறைய பிரச்சனைகளும் கூடவே வந்துருது.

முதல் பிரச்சனை – சாதாரணமா ஏற்படக்கூடிய தளர்ச்சி இது வயது மூப்பின் காரணமாக வருது அது தெரிஞ்சாலும்அதை மனசு ஏத்துக்க மறுக்குது. இயல்பா நம்மலால செய்ய முடிஞ்ச ஒரு வேலைக்கு கூட இன்னொருத்தர் உதவியைஎதிர்பார்க்கும் சூழல்.. இதெல்லாம் உண்டாக்குற மனச்சோர்வு இதுவே நாளைடைவில் தீவிர மனஅழுத்ததிற்குகாரணமாய் அமைந்துவிடுகிறது

அடுத்த பிரச்சனை – ஞாபக மறதி இதுவும் ரொம்ப இயல்பான விஷயம் தான். சின்ன சின்ன விஷயங்கள் உதாரணமாககண்ணாடி, வாக்கிங் ஸ்டிக்

ஆரம்பித்து.. அவங்க பெயர் கூட மறக்குறவங்களும் இருக்காங்க

அடுத்த பிரச்சனை செரிமான பிரச்சனை, 4 இட்லி சாப்பிடுறவங்களுக்கு ஒரு இட்லிய சாப்பிடுறதுக்கே போதும்போதும்னு ஆகிடும். இதுல தேங்காய் சட்னி கூட ஒத்துக்காது பசி இன்மை , வயிறு உப்பிசம், அப்படி நிறையபிரச்சனைகள்.

அடுத்ததாக பார்த்தால் பார்வை திறன் கேட்கும் திறன்ல வருகிற சிறு சிறு குறைபாடுகள். இதன் காரணமாகஅவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. அவர்களால் பிறருடன் சகஜமாய் பழக முடியாமல் போகிறது

அடுத்த பிரச்சனை தனிமை.

பெரும்பாலும் ஓய்வு பெற்று பென்ஷன் வாங்குறவங்களோட நிலைமை

பரவாயில்லே…. இதுவே பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கவங்களோட நிலைமை கஷ்டம் தான். தன்னோடசின்ன சின்ன தேவைகளுக்கு கூட மத்தவங்களை சார்ந்திருக்கும் நிலை தீவிர மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. ஆதிலும் கொடுமை என்னன்ன வாழ்க்கை துணையை இழந்தவங்களோட நிலைமை.அவங்களோட இழப்பு, அந்ததனிமை இதெல்லாமே கிட்டதட்ட நரகம் தான்

சரி இதெல்லாம் எப்படி சரிபண்ணலாம்?

முடிந்தவரை அவர்கள் தனிமையை

உணராதவாறு இருக்குமளவிற்கு அவர்களை சின்ன சின்ன வேலைகளை செய்ய வைக்கலாம், எல்லாருக்கும் பிடித்தமுடியாத பட்சத்தில் குடும்பத்தினர்கள் அவர்களுக்கு உதவலாம்.ஒவ்வொருவருக்கும் பிடித்த விஷயங்கள் ஏதாவதுஇருக்கதான் செய்கிறது, அப்படி ஏதேனும் ஒரு

விஷயத்தில் அவர்களை ஈடுபடுத்திக்கொண்டால் நல்லது.

எப்படி குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது முக்கியமோ அதை விட அவசியம் இந்த பெரிய குழந்தைகளுக்கெனவும்நம் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுதல்.

இதெல்லாம் செய்தால் நிச்சயம் அவர்களுடைய ஓய்வு காலம் சந்தோஷமானதாக மாற்ற இயலும்…, ஏன்னா வாழ்க்கைநிரந்தரம் இல்லை ஒரு நாள் நமக்கும் வயசாகும் இல்லையா..?

  • மரு . கீதா பரமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *