வடஅமெரிக்கத் தமிழர்களின் சிறுகதைப் போட்டி அழைப்பு!

தாயின் மடியில் தலை சாய்த்துப் பல கதைகள் கேட்டதுண்டு, தாய்த் தமிழும் தன்னிகரில்லாத சங்க இலக்கியமும் பல கதைகள் நமக்குச் சொல்லியதுண்டு. இப்படிச் சங்ககாலம் முதல் சமகாலம் வரை மக்களின் வாழ்ந்த வாழ்க்கையையும், வரலாற்றையம் கதைகளாய்த் தமிழர்கள் நாம் கடத்தி வந்துள்ளோம். மனிதன் தான் இருக்கும் இடத்தின் வாழ்வியலை விளக்கி எழுதும் கதைகள் அங்கு வாழும் மக்களுக்கும், அந்தக் கதைகளைப் படிக்கும் மக்களுக்கும், அந்தப் புலம்பெயர்ந்த மக்கள் புது இடத்தில் தங்களை எப்படி நிலைநாட்டுகிறார்கள், புதிய காலநிலை, […]