தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை – நீர்நிலைகள் மீட்பு களங்களில் பெருந்தடம் பதித்து வீச்சுடன் இயங்கி வரும் அமைப்பு EXNORA.
அதன் நிறுவனர் திரு. MB நிர்மல் ஐயா அவர்கள். இற்றை நாள் தமிழகத் தலைவர் திரு. செந்தூர் பாரி. திருவாரூரில் புகழ்பெற்ற வேலுடையார் கல்விக் குடும்பத்துக்காரர். இவரும் The Rise & CTACIS அமைப்புகளின் முன்னத்தி ஏர். நேற்று சென்னை EXNORA அலுவலகத்தில் சோழகங்கம் – பொன்னேரி மீட்பு குறித்த கூட்டம் நடந்தது.
பல ஏரிகள் – குளங்களை ஆரவாரம்மில்லாமல் மீட்டுத் தந்த பேராளுமை ஐயா சபரி பவுண்டேஷன் சுப்ரமணியம் அவர்கள், இயற்கையை சுவாசிக்கும் – நேசிக்கும் வெற்றித் தொழிலதிபர் திரு.மோகன் அவர்கள், சிந்தனையும் – செயற்திறனும் கொண்ட திரு.உமாபதி அவர்கள், நற்பணிக்கு நிதி திரட்டும் ஆற்றல் பெற்ற திருமதி.ராதா – இவர்களோடு இன்னும் பல ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
சோழகங்கம் – பொன்னேரி மீட்பு இயக்கத்தில் EXNORA அமைப்பு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் என அறிவித்தனர்.
EXNORA அமைப்பினை அதன் உரமேறிய ஆளுமைகளை சோழகங்கம் – பொன்னேரி மீட்பு இயக்கம் வாழ்த்தி வணங்குகிறோம் என அறிவித்துள்ளனர்.