சென்னையிலேயே கிடைக்கும் அமெரிக்க பிரபல உணவு வகைகள்

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சமையல் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் பிரபலமான சிக்கன் பிராண்டான Popeyes இந்தியாவில் பெங்களூரை தொடர்ந்து சென்னையில் முதல் கடையைத் திறந்து அசத்தியுள்ளது.
Popeyes நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் ஐடி நகரமான பெங்களூரில் தனது முதல் உணவகத்தை 2022 ஜனவரி மாதம் திறந்ததைத் தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்திற்குள் பெங்களூர் நகரம் முழுவதும் 12 உணவகங்களை விரைவாக விரிவாக்கம் செய்தது.
பெங்களூரை தொடர்ந்து சென்னைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தடுத்து நாட்டின் பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளோம். மசாலா மற்றும் கஜூன் சுவையூட்டப்பட்ட ப்ரைடு சிக்கன் தான் எங்களின் முக்கிய உணவு, இது சென்னை மக்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறோம் என Popeyes நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சமீர் கெதர்பால் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *