ஜேம்ஸ் பாண்டு என்னும் கற்பனை கதாபாத்திரம் உருவாகி இந்தாண்டோடு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. லான் ஃப்ளம்மிங் என்னும் நாவலாசிரியர் உருவாக்கிய இந்த கற்பனை கதாபாத்திரம் பின்னாளில் அனைவரின் கனவு ஹீரோவாக மாறியது. எயோன் தயாரிப்பு நிறுவனம் ஃப்ளம்மிங்-ன் ஜேம்ஸ் பாண்டு நாவலின் ஒட்டுமொத்த காப்புரிமையைப் பெற்றிருக்கிறது. ஜேம்ஸ் பாண்டு என்னும் இந்த கதாபாத்திரம் பிரிட்டிஷ் ரகசிய உளவாளியாக வருவது போல கதைகளில் கதைகளம் அமைந்திருக்கும்.
முதன்முதலாக 1961ம் ஆண்டு இந்த கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்டு காப்புரிமையைப் பெற்று சீன் கானரி என்னும் ஹாலிவுட் நடிகரைக் கொண்டு முதல் படம் தயாரிக்கப்பட்டு 1962ம் ஆண்டு வெளியானது. சீன் கானரி முதல் பியர்ஸ் ப்ராஸ்னன், டேனியல் க்ரெய்ஹ் வரை ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் வெளியாகியது. 2022ம் ஆண்டு வரை 27 படங்கள் ஜேம்ஸ் பாண்டு சீரிஸ்-ல் வெளியாகியிருக்கிறது.
இந்த ரகசிய உளவாளிக்கு 007 என்னும் எண் கொடுக்கப்பட்டிருக்கும். ஜேம்ஸ் பாண்டு படங்கள் உலகளவில் ஒட்டுமொத்தமாக 20 பில்லியன் டாலர் அளவிற்கு லாபம் சம்பாதித்திருக்கிறது. ஜேம்ஸ் பாண்டு 007 படங்கள் பிரிட்டிஷ் அகேடமி விருதுகள், கோல்டன் க்ளோப் விருதுகள், ஆஸ்கார் போன்ற பல விருதுகளை அள்ளி குவித்திருக்கிறது.
இந்த பிரிட்டிஷ் ரகசிய உளவாளி உலகெங்கும் உள்ள குழந்தைகள், இளைஞர்களுக்கு ஓர் ஹீரோதான் எப்போதுமே. உலக சினிமா ரசிகர்களை எப்போதுமே ரசிக்க வைத்த ஜேம்ஸ் பாண்டு உருவாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
