மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 39 பேர் பலியாகினர்; 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மெக்சிகோவின் வடக்கே அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள சியூடார்ட்ஸ் வாரிஸ் நகரில் புலம் பெயர்ந்தவர்கள் தங்குவதற்கான மையம் உள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்கள் உள்ளிட்ட பலரும் இங்குள்ள தேசிய புலம்பெயர் நிறுவன முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும் 39 பேர் தீயில் கருகி இறந்துவிட்டதாகவும், மேலும் 29 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. புலம்பெயர் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மெக்சிகோ அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.