உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பிரிக் ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் அக்டோபர் மாதம் 14ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து,
தமிழ் மொழி வாழ்த்துகளுடன் விழா தொடங்கியது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீசரவணன் அவர்கள், தொலைக்காட்சியில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள் திரு.ராஜா மற்றும் திருமதி பாரதி பாஸ்கர்,கயல் அக்ரோ ஃபுட்ஸ் உரிமையாளர் திரு கதிரேசன், திருமதி.நவீனா சந்தோஷ், திரு.ஹரீஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
பள்ளியின் இணை நிறுவனர் திருமதி.ராதிகா ஹரீஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். குழந்தைகளின் கலாச்சார பல்சுவை நிகழ்ச்சிகள் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது.
மதிப்பிற்குரிய அமைச்சர்.திரு.சரவணன் அவர்கள், திரு. ராஜா, திருமதி. பாரதி பாஸ்கர் ஆகியோரது வெகு சிறப்பான உரைகளைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களையும் புரவலர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. கலகலப்பான கேள்வி பதில் உரையாடலும் முக்கிய இடம் பெற்றது.
குழந்தைகளின் பதக்கங்கள் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நன்றியுரையுடன் விழா இனிதே சிறப்பாக நிறைவு பெற்றது.