நாகலாந்து மாநிலத்தில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் முதன்முறையாக வெற்றிப் பெற்று எம்எல்ஏவான பெண்கள்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் முதன்மை செய்தி

பொதுத் தேர்தர்களில் பெண்களின் பங்களிப்பு, தேர்தலில் போட்டியிடுவது 21ம் நூற்றாண்டிலும் குறைவாகவே உள்ளது. பெண்களுக்கு கட்டாய 33% இடஒதுக்கீடு வேண்டும் என்ற சட்டப் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டப் பேரவைக்கான தேர்தலில் முதன்முறையாக பெண்களைப் வெற்றிப் பெறச் செய்திருக்கிறார்கள் மக்கள்.
நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக 2 பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரு பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுது இதுவே முதன்முறை. தீமாப்பூர்-3 தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி வேட்பாளர் ஹக்கானி ஜக்காலு வெற்றி பெற்றார். மேற்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி வேட்பாளர் சல்ஹொடியூனோ குரூஸ் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published.