இந்திய டாப் 100 கோடீசுவரர்களின் போர்ப்ஸ் பட்டியல்; முதல் இடத்தில் அதானி, அம்பானிக்கு 2-வது இடம்

Nri தமிழ் வணிகம் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

இந்தியாவில் 2022ஆம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி, 100 பணக்கார பில்லியனர்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் 100 பணக்காரர்களின் ஒட்டுமொத்த செல்வம் 25 பில்லியன் டாலர் அதிகரித்து 800 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. முதல் 10 பணக்காரர்களின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு 385.2 பில்லியன் டாலராக உள்ளது, இது 2021 ஐ விட 15.1 சதவீதம் அதிகமாகும்.
இந்த பட்டியலில் கௌதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவாலும், இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகளில் வருகையாலும் அவருடைய சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இரண்டாவது இடத்தில், முகேஷ் அம்பானி உள்ளார்.
கௌதம் அதானி டாப் 10 பணக்காரர்களில் 385 பில்லியன் டாலர் அதிகரிப்பால் தற்போது அவர் முதலிடம் பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அதானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,211,460.11 கோடி ஆகும். கடந்த ஆண்டினை காட்டிலும் இவரின் சொத்து மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
முகேஷ் அம்பானி கடந்த 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஆயில் முதல் தொலைத் தொடர்பு வரையில் பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இவரது சொத்துமதிப்பு 710,723.26 கோடி ரூபாயாகும்.
மூன்றாவது இடத்தில், ராதகிஷன் தமனி இடம்பெற்றுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை சப்ளை செயின் நிறுவனமான டிமார்ட் நிறுவனத்தின் தலைவரான இவரின் மொத்த சொத்து மதிப்பு, 222,908.66 கோடி ரூபாயாகும்.
இவரை தொடர்ந்து, சைரஸ் பூனவல்லா 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளாரான சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 173,642.62 கோடி ரூபாயாகும்.
ஷிவ் நாடார் இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு, 172,834.97 கோடி ரூபாயாகும். இந்த ஆண்டு 662 மில்லியன் டாலர் தொகையினை கல்விக்காக நன்கொடையாக ஷிவ் நாடார் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வது இடத்தில், சாவித்ரி ஜிண்டால் இடம்பெற்றுள்ளார். டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் ஆவார். இவரின் சொத்து மதிப்பு 132,452.92 கோடி ரூபாயாகும்.
7-வது இடத்தில் தீலிப் சாங்வி & ஹிந்துஜா பிரதர்ஸ் சன் பார்மா நிறுவனத்தின் இவர்களுடைய சொத்து மதிப்பு 125,184.21 கோடி ரூபாயாகும்.
8-வது இடத்தில் ஹிந்துஜா குழுமத்தின் சகோதரர்களான கோபிசந்த் ஹிந்துஜா, பிரகாஷ் ஹிந்துஜா, ஸ்ரீ சந்த் ஹிந்துஜா, அசோக் ஹிந்துஜா உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு 122,762.29 கோடி ரூபாயாகும்.
தொடர்ந்து 9-வது இடத்தில், குமார் பிர்லா ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் பிர்லாவின் சொத்து மதிப்பு , 121,146.01 கோடி ரூபாயாகும்.
இறுதியாக 10-வது இடத்தில், பஜாஜ் குழுமம் சுமார் 40 நிறுவனங்களை தனது போர்ட்போலியோவில் கொண்டுள்ளது. 96 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த வணிக குழுமம், மும்பையில் ஜம்னாலால் பஜாஜ் என்பவரால் தொடங்கப்பட்டது. இவர்களின் சொத்து மதிப்பு 117,915.45 கோடி ரூபாயாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *