அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சேலம், நெடுங்குளம் அருகே சிலுவம்பாளையம் என்ற குக்கிராமத்தில் கிளைக் கழகச் செயலாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி தன்னுடைய 69ஆம் வயதில் 2023ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மாபெரும் கட்சியின் தனிப் பெரும் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
27 ஆண்டுகள் பதவி வகித்து ’அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர்’ என்று கூறப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 7 ஆண்டுகள் கழித்து, ஈபிஎஸ் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தின் தீர்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளனர். எடப்பாடியார் பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.