முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் – அக்டோபர் 15ம் தேதி கொண்டாடப்பட்டது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு

முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாமின் பிறந்த தினம் இன்று சர்வதேச மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அப்துல் கலாம் பெரும் உந்துகோளாக விளங்கியவர். அவரின், இந்த பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, 2010 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அப்துல் கலாம் பிறந்த அக்டோபர் 15 “உலக மாணவர் தினம்” என்று அறிவித்தது .
விஞ்ஞானி முதல் குடியரசுத் தலைவர் வரை நாட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணி இன்றியமையாதது என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
விங்ஸ் ஆஃப் ஃபயர்’, ‘மை ஜர்னி’ ‘பற்றவைக்கப்பட்ட மனங்கள்’ ‘இந்தியா 2020′ போன்ற புத்தகங்களின் மூலம் தனது எழுத்து திறமையையும் அப்துல் கலாம் வெளிபடுத்தினர்.
1998 இல் போக்ரான்- II அணுசக்தி சோதனைகளில் முக்கிய பங்கு வகித்ததன் மூலம் ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்ற பட்டத்தைப் பெற்றார். 2005 ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டிற்க்கு விஜயம் செய்த கலாமின் நினைவை அடையாளப்படுத்தும் விதமாக மே 26ம் தேதியை அந்நாடு ‘அறிவியல் தினம்’ என்று கொண்டாடி மகிழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *