விளையாட்டுப் போட்டிக்காக சென்ற அரசு பள்ளி மாணவிகள் காவிரி ஆற்றின் சுழலில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் – கரூரில் நடந்த சோகம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை

குளித்தலை அருகே ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தலைமையாசிரியர் பொட்டு மணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல தவறியதால் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குடி பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த பிலிபட்டி நடுநிலை பள்ளியில் 83 மாணவிகள் பயின்று வருகின்றனர். 8-ம் வகுப்பு வரையுள்ள இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் பலர் கால்பந்து போட்டிக்கு தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். நேற்று மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து மாநில அளவில் போட்டியில் கலந்துகொள்ளவதற்காக கரூர் மாவட்டம் தொட்டியதில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதாற்காக நேற்று மாலை 3 மணிக்கு 13 மாணவிகளை அழைத்துக்கொண்டு ஜெபசாய இப்ராஹிம் என்ற இடைநிலை ஆசிரியர், ஆசிரியை திலகவதி அழைத்து சென்றுள்ளனர். இன்று காலை நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். 2-வது சுற்று போட்டிக்கு இடைவெளி இருந்த காரணத்தால் 13 மாணவிகளும் அருகில் உள்ள ஆற்றில் சுற்றிப்பார்க்க வந்துள்ளனர்.
அப்போது ஆற்றில் இறங்கிய ஒரு மாணவி ஆற்றில் சிக்கிக்கொண்ட நிலையில், அவரை காப்பாற்ற சென்ற மற்ற 3 மாணவிகள் ஆற்றில் சிக்கிகொண்டனர். மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா, ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
மாணவிகளை போட்டிக்கு அழைத்து சென்று கவனக்குறைவாக நடந்துகொண்ட காரணத்தால் பள்ளியின் தலைமையாசிரியர் பொட்டு மணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *