தமிழகத்திலிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன் இருப்பைப் பதிவு செய்த ஒருசில விடுதலைப் போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பிரம் பிள்ளை குறிப்பிடத்தக்கவர். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் செப்டம்பர் 5ம் 1872ல் பிறந்தார். பிரபல செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த வ.உ.சி வழக்கறிஞராக பணியாற்றியவர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் அடக்குமுறையை எதிர்த்து வந்த வ.உ.சி தன் சொந்தமுயற்சியால் உள்நாட்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். இவரது சொந்தக் கப்பல் தூத்துக்குடி முதல் கொழும்பு வரையில் போக்குவரத்தை மேற்கொண்டது. அன்று இவரது செயல் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது.
வ.உ.சி வழிக்கறிஞராக மட்டுமில்லாமல், சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் தொழிற் சங்கத் தலைவர் என பன்முகத்திறமைக் கொண்டராகவும் விளங்கினார். வ.உ.சி அவர்கள் தொடங்கிய உள்நாட்டு கப்பல் நிறுவனத்தை லாபகரமாக நடத்தி வந்தார். பாலகங்காத திலகர் அவர்களின் எழுத்துக்களால், பேச்சால் கவரப்பட்டு அவரது சீடராக தன்னை அறிவித்துகொண்டர் வ.உ.சி அவர்கள்.
பாரதியாரின் நட்பைப் பெற்ற வ.உ.சி அவர்கள், பாரதியோடு விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று வெள்ளையர்ளின் கொடுமைகளை எதிர்த்து மக்களை திரட்டினார். சிதம்பரம் பிள்ளை அவர்கள் வேகத்தையும், அவருக்கு கிடைத்த மக்கள் ஆதரவையும் கண்டுப் பொறுத்துக்கொள்ளாத பிரிட்டிஷ் அரசாங்கம் வ.உ.சி அவர்களைச் சிறையில் அடைத்தது. அத்தோடு அவரது வழக்கறிஞர் உரிமத்தையும் ரத்துச் செய்தது.
வெள்ளையர்களை எதிர்த்து விடுதலைப் போராட்டக் களத்தில் தீவிர பணியாற்றிய வ.உ.சியை சிறையில் அடைத்து செக்கிழுக்க வைத்தது அன்றையக் காலகட்டத்தில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. 2022 வ.உ.சியின் 151வது ஆண்டாகும். தமிழக அரசு வ.உ.சி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளது.