யுபிஐ மூலம் பிறநாட்டு வங்கி கணக்குகளுக்கு பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் தொடக்கம்

அரபு நாடுகள் ஆஸ்திரேலியா இந்தியா உலகம் ஐரோப்பா கனடா சிங்கப்பூர் செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்து இந்தியாவின் தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பில், சா்வதேச கைப்பேசி எண் மூலம் யுபிஐ பணப் பரிவா்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்தியா்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வந்தனா்.
அதன்படி, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தாா், அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய 10 நாடுகளில் வாழும் இந்தியா்கள் ரூபாயில் பணப் பரிவா்த்தனை செய்ய என்ஆா்இ அல்லது என்ஆா்ஓ வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, தங்களின் சா்வதேச கைப்பேசி எண்களை இணைத்து கொள்ள வேண்டும். அந்தந்த நாடுகளின் கைப்பேசி எண்ணின் முதல் இலக்கங்களை வைத்து பணப் பரிவா்த்தனை செய்ய அனுமதி அளிக்கப்படும். விரைவில் பிற நாடுகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு இந்தப் புதிய திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *