உலகெங்கிலும் வாழும் இந்துக்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதூர்த்தி மிக முக்கியமாதாகும். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிலும் விநாயகர் சதூர்த்தி மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் அநேக நகரங்களில் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாக பிள்ளையாருக்கு கோயில்களில் அனைத்து இடங்களிலும் இருக்கிறது.
அமெரிக்காவில் குறிப்பாக நியூயார்க் நகரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அதனால் அனைத்து இந்து பண்டிகைகளும் இங்கு கோலாகலமாக கொண்டடப்படுவது வழக்கம். விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிலும் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் விநாயகர் கோயிலின் சார்பாக ரதயாத்திரையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 11ம் தேதி நியூயார்க் முக்கிய வீதிகளில் இந்த ரதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ரதயாத்திரை பற்றி நியூயார்க் மாகாண கவனர் எரிக் ஆடெம்ஸ் கூறுகையில் இப்படியான வழிபாடு, சம்பிரதாயங்கள் மக்களிடையே புது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இவ்வறான பூஜைகள், வழிபாட்டு முறைகளை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.