புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் சார்ந்த அல்லது அதன் தோற்றத்தோடு ஒத்திருக்கும் பொருட்களில் பயன்படுத்தப்படும் பெயர் அல்லது அடையாளம் ஆகும். இந்தியா உலக வர்த்தக மையத்தின் உறுப்பினர் என்பதால் புவியியல் சார்ந்த பொருட்களுக்கு அடையாளங்கள் சட்டத்தை இயற்றி அதற்கு புவிசார் குறியீடுகள் வழங்குகின்றது. உலக வர்த்தக மையத்தின் உறுபினரின் பிராந்தியத்தில் ஆல்லது பிரதேசத்தில் காணப்படும் பொருள் அதன் நற்பெயர் அல்லது சிறப்பியல்பு அதன் புவியியல் சார்ந்தே அமைகிறது.
அவ்வாறு புவியியல் சார்ந்த பொருட்களுக்கு கொடுக்கப்படும் குறியீடுளை முறைகேடா மற்ற பகுதிகளில் பயன்படுத்தமுடியாது என்பதை இக்குறியீடு உறுதி செய்கிறது. இந்தியாவில் முதன்முதலில் டார்ஜிலிங் தேயிலைக்கே புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்தியாவில் பல அந்தந்த பகுதிகளின் சிறப்பம்சம் கொண்ட பல பொருட்கள், உணவுகள் உள்ளன. அவ்வாறு சேலம் சுங்குடி, பவானி ஜமக்காளம், தஞ்சை ஓவியங்கள், ஆரணிப் பட்டு, சேலத்துப் பட்டு, தஞ்சை தலையாட்டி பொம்மை என தமிழகத்தின் பல புகழ்பெற்ற பொருட்கள் புவிசார் குறியீடு அடையாளங்களைப் பெற்றுள்ளது.
பெங்காலிகளின் மிக முக்கிய இனிப்பு பண்டமான ரசகுல்லாவிற்கும் புவிசார் குறியீடு அடையாளம் கிடைத்தது. அப்போது மிக சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. பெங்காலிகளின் ஆஸ்தான இனிப்பாக இருந்தாலும் அது ஒடிஷா மாநிலத்தில் அந்த பண்டம் அறிமுகமானது என்பதால் ஒடிஷா ரசகுல்லா என அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
இதுபோக தென் தமிழகத்தின் மிக பிரபலமான திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், மதுரை மல்லி, ஈரோடு மஞ்சள் போன்றவைகளுக்கும் புவிசார் குறியீட்டு அடையாளங்கள் வழங்கப்பட்டுள்ளன.
