இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் விரைவில் ஏலத்தில் வைக்கப்படுகின்றன. பிரதமர் செல்லும் நிகழ்ச்சிகள், வெளிநாட்டுப் பயணத்தின் போதும், தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் கொடுக்கும் பரிசுப் பொருட்கள் அவ்வப்போது ஏலத்தில் விடப்பட்டு அதன் தொகையை கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
2021ம் ஆண்டும் மூவாயிரத்திற்கும் மேலான பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அதில் வந்த தொகையனைத்தும் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டது. 2022ம் ஆண்டும் பிரதமருக்கு கிடைத்த அனைத்து பரிசுப் பொருட்களும் ஏலத்தில் வைக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டது. ஆகையால் www.pmmementos.gov.in என்ற இணையதளத்தில் 1200 பரிசுப் பொருட்களும் வரிசைப்டுத்தப்படும்.
செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை இந்த ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய் முதல் 1,00,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்தொகை கங்கை தூய்மைத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்.