மாணவியை காவு வாங்கிய ஷவர்மா

NRI தமிழ் டிவி ஆரோக்கியம்

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ளது ஐடியல் ஃபுட் பாயிண்ட் என்னும் உணவகம். இங்கு சமீபத்தில் ஷவர்மா வாங்கி உண்ட 40க்கும் மேற்பட்டடோர் கடும் உடல்நல பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 16 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவகத்தை தற்காலிகமாக மூடியுள்ள அரசாங்கம் இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த மாணவியின் மரணத்திற்கு காரணம் ஷிஜெல்லா எனப்படும் நுண்ணுயிரி தான் எனவும், இது சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன உணவு மற்றும் குடிநீர் மூலமாக நமக்குள்ளே பிரவேசிக்கும் என்றும் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மூன்று நபர்களுக்கும் இந்த ஷிஜெல்லா தொற்று கடுமையாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 14 கடைகளை ஆய்வு செய்து அதில் நான்கு மூட உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *