தமிழகத்தை சேர்ந்த கூகுள் அல்பபெட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் அவர் இன்று விருதை பெற்று கொண்டார். இதையடுத்து சுந்தர் பிச்சை மத்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் மனம் உருகி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம விருதுகள் பட்டியலில் பத்ம விபூஷன், பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட மூன்று விருதுகள் இடம்பெற்றுள்ளன.
தொழில் துறையை பொறுத்தமட்டில் தொழில் துறையை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட கூகுள் ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான இந்தியாவின் சத்ய நாதெல்லா ஆகியோர் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில் தான் சமீபத்தில் பத்ம விருதுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. பதவிக்காலம் முடிவடைவற்கு முன்பாக இந்த விருதுகளை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்று கொண்டார். இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார்.
இந்த விருதை பெற்ற சுந்தர் பிச்சை இந்தியாவுக்க நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துக்கு நன்றி. எனது குடும்பத்தினர் இருக்கும் இந்த வேளையில் பத்ம பூஷண் விருது பெறுவது பெரிய கவுரமாக உள்ளது. விருது வழங்கிய இந்திய மக்களுக்கும், அரசுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.