வெளிநாட்டு நன்கொடை – பிடியை இறுக்கும் சி.பி.ஐ

இந்தியா

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்று வந்த நன்கொடையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் பல் புதிய நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்படுத்தி இருந்தது. இதனால், வெளிநாட்டு நன்கொடை பெறுவது கடினமாகிப் போனது.

இந்த விதிமுறைகளை மீறி நன்கொடை பெற்று தரும் பணியில், மத்திய உள்துறை, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் இடைத்தரகர்கள் ஈடுபட்டு வருவதாக அறிய வந்தது. இதனையடுத்து சென்னை, கோவை, டில்லி உட்பட 40க்கும் மேற்பட்ட நகரங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துளது அம்பலமானது.

இந்த மோசடி தொடர்பாக ஆறு பேரை இதுவரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இரண்டு கோடி ரூபாய் வரை, ‘ஹவாலா’ பணம் புழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நாடு தழுவிய அளவில், பலர் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ., அதிகாரிகள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.