தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கி சில மணி நேரங்களில் அதனை திரும்பப் பெற்றார். செந்தில் பாலாஜியை நீக்கிய நடவடிக்கைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பல்வேறு மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளார் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி தரவில்லை என்றும் திமுக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி குடியரசுத் தலைவருக்கு 19 பக்க கடிதம் ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில், “ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்துள்ளது.
சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற தாமதம் காட்டுகிறார். குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம் காட்டுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அரசியல் மற்றும் கருத்தியலுக்கு எதிராக செயல்படுகிறார். குற்றவாளிகளை ஆதரிப்பதோடு, காவல் துறை விசாரணையில் தலையிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published.