கிராம மக்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் !

செய்திகள்

டிசம்பர் 8 அன்று தேசத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று கூறக்கூடிய வகையில், பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தமிழகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியது.

63 வயதான ராவத், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக 2019 இல் அமைக்கப்பட்ட அலுவலகத்தின், இந்தியாவின் முதல் பாதுகாப்பு ஊழியர்களின் தலைமை அதிகாரி ஆவார்.

ஜெனரல் ராவத் சூலூர் IAF நிலையத்திலிருந்து குன்னூரில் உள்ள வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் பயணம் செய்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மதியம் 12:20 மணியளவில் விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இடத்தில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீ ஏற்பட்டு மொத்தமும் தீக்கிரையாகி உள்ளது.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், “மிகவும் துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. அவரது அகால மரணம் நமது ராணுவத்துக்கும் நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு” என்றும் “தமிழ்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பிற ராணுவ வீரர்களை இழந்துவிட்டதால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் மிகுந்த சிரத்தையுடன் இந்தியாவிற்கு சேவை செய்தனர். என் எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன.” என்று பிரதமர் மோடியும் தங்களது வருத்தத்தினையும் இரங்கலையும் தெரியப்படுத்தியிருந்தனர்.

இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதிக்கு உலகம் முழுவதிலும் இருந்து அஞ்சலிகள் குவிந்து வருகின்றன.

விபத்து நடந்த இடத்தின் அருகே இருந்த கிராம மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குரூப் கேப்டன் வருண் சிங் அவர்களைக் காப்பாற்றி மருத்துவமனை கொண்டு செல்ல உதவி புரிந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்வில் ,அந்த கிராம மக்கள் “கடவுள்” போல உதவியிருப்பதாகக் கூறி தலைமையகத்தின் தளபதி தக்ஷின் பரத் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் ஏ அருண் ஆகியோர் கிராம மக்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

மேலும் தளபதி தக்ஷின் பரத் கூறுகையில் தலைமையகம் அந்த கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்தார். உள்ளூர் மக்களுக்கு போர்வைகள், ரேஷன் பொருட்கள் மற்றும் சூரிய ஒளியில் இயங்கும் அவசர விளக்குகளையம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *