நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகைகளில் விநாயகர் சதூர்த்தி முதன்மையாகும். விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதூர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் வளர்பிறை சதூர்த்தி நாளன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்தில் தான் சதூர்த்தி கொண்டாட ஆரம்பத்திருக்கிறது. மும்பை நகரில் நாட்டில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மஹராஷ்ட்ரா இம்மாநிலங்களில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பிள்ளையார்பட்டி மிகவும் பிரசித்திப் பெற்ற ஊர். இங்க அமைந்திருக்கும் பிள்ளையார் கோவில் உலகப் புகழ் பெற்றத் தலம். விநாயகர் சதூர்த்தி தினம் மிகவும் கோலாகமாகக் கொண்டாடப்படும்.
விநாயகர் சதூர்த்தியன்று விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை, சுண்டல் போன்ற பதார்த்தங்கள் செய்து வழிபடுவர்.
விநாயகர் சிலைகள் வீடுதோறும், பந்தல்கள் அமைத்து அங்கு வைத்தும் வழிபடுவர். 3 நாட்கள் அல்லது 5 நாட்கள் வைத்து வழிபட்டு பின்னர் ஆற்றில் அல்லது குளத்தில் கரைப்பார்கள்.
இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் பல ஹிட்டான படங்களின் ஹீரோக்களை பிரதிபலிக்கும் வகைகள் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரஜினிகாந்த் ஜெயிலர் கெட்அப், புஷ்பா திரைப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் போன்றும், கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் திரைப்படங்களின் ஹீரோக்கள் போன்றும் சிலைகள் வடிவமைத்தது இந்தமுறை கவனத்தை ஈர்த்திருக்கிறது.