அமெரிக்காவில், 6 வயது பள்ளி மாணவன், வகுப்பறையில் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியாவில் மாகாணத்தில் ரிச் நெக் என்ற துவக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், நேற்று முன்தினம் வகுப்பறையில் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்டதால் அவர் படுகாயம் அடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஆசிரியையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அந்த சிறுவனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் பிற மாணவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. சமீபகாலமாகவே அமெரிக்க பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
துப்பாக்கி விற்பனைக்கு அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.
![](https://nritamil.com/wp-content/uploads/2023/01/images-36.jpeg)