பெங்களூரு, அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகம் திறக்கப்பட உள்ளது என்றும், ஹெச்1பி விசாவை நீங்கள் அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என்றும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
வாஷிங்டன் டிசி நகரில் ரொனல்டு ரீகன் மாளிகையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்தியாவில் நீங்கள் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம் ஆகும். இந்தியாவில் கூகுளின் AI ஆராய்ச்சி மையம் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் வேலை செய்கிறது. இந்திய அரசின் உதவியுடன், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவப்படும். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் இந்த நூற்றாண்டில் உலகையே சிறப்பாக மாற்றும். இந்த உறவில் இந்தியர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் முக்கிய பங்கு இருக்க போகிறது என்று கூறினார்.
