இன்றைய இளையச் சமுதாயம் உடல் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தும் ஓர் தலைமுறையாக இருந்தாலும், இன்றையக் காலச்சூழல் அதற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. வேலைச் சூழல், உணவு பழக்கவழக்கம், பெருகிவரும் மாசு இது போல பல விஷயங்கள் மனித ஆரோக்கியத்திற்கு எதிரியாக நிற்கிறது. பெருகி வரும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவகைகள் சர்வ சாதாரணமாக ஆண்கள், பெண்களென இருபாலரிடமும் காணப்படுகிறது.
இன்றைய இளைஞர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது இக்கால உணவு பழக்கம். வேலைமுறை, வேலை செய்யும் நேரமெல்லாம் மாறிப்போனதால் உணவு உட்கொள்ளும் நேரமும் மாறி பல்வேறு சிக்கலில் இக்கால தலைமுறை நிற்கிறது. சமையலில் பயண்படுத்தும் எண்ணெய், தானியங்களில், காய்கறிகளிள் கலந்திருக்கும் ராமாயணம் போன்றவைகள் உடல் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக்கின்றன.
இப்படியானச் சூழல் இன்றைய இளைஞர்களுக்கு இளம்வயதிலேயே மாரடைப்பு எனும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு மாரடைப்பு என்றச் செய்தி சமீபக் காலத்தில் அடிக்கடி வருகிறது. குறிப்பாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் இப்படி மாரடைப்பு வந்து இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் போகும் பரிதாப நிலை ஏற்படுகிறது.
கடந்த வாரம் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கபடி போட்டியின் போது ஓர் இளைஞர் களத்திலேயே மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்தது விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும் அந்த இளைஞர் நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருந்ததால் தான் அன்று விளையாடினார் என்பது குளிப்பிடத்தக்கது.