அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் நகரில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தெற்கு சான் ஃப்ரான்சிஸ்கோ, ஸ்பிரிங்வில்லி, பஜாரோ, சாண்டா குரூஸ் ஆகிய பகுதிகளில் வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவை இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு தண்ணீரில் மூழ்கியுள்ளன.