ஹாலிவுட் திரைபடங்களில் மகத்தான வெற்றிப் பெற்ற அவதார் திரைபடம் மீண்டும் திரையிடப்படப்போகிறது. 2009ம் ஆண்டு உலகெங்கும் திரையிடப்பட்ட இப்படம் வசூலை அள்ளிக்குவித்தது. ஜேம்ஸ் கேமரூன் இப்படத்தின் இயக்குநராவார். இப்படத்தை இயக்க 1994ம் ஆண்டு முதலே வேலைகளைத் தொடங்கிய கேமரூன் சரியான தொழில்நுட்பம் கிடைக்க சில ஆண்டுகள் காத்திருந்தார்.
இப்படத்தை படம்பிடிக்கவே பிரத்யேக கேமரா ஒன்று வடிவமைக்கப்பட்டது என்றால் அது ஆச்சரியம் தான். இப்படத்தில் பேசப்படும் மொழியும் புதிதாக உருவாக்கப்பட்டது. 250 மில்லியன் டாலர் அளவிற்கு இப்படம் உருவாக செலவிடப்பட்டது. இப்படம் வெளியாகி உலகெங்கும் ஒட்டுமொத்த வசூலாக கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் அளவிற்கு இமாலய வசூலை வாரிக் குவித்தது. இதற்கு முன்னர் டைட்டானிக் திரைப்படம் தான் உலகிலேயே அதிக வசூல் செய்த படமாக இருந்ததை இப்படம் முறியடித்தது.
2009ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று மீண்டும் மறு-வெளியீடும் செய்யப்பட்டது. அவதார் -2 இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. அதனால் முதல் பாகத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வரும் பட்சத்தில் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என்பதால் அவதார் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது.