ஒரே ஆண்டில் 3 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற மைல்கல்; ஹோண்டா நிறுவனம் அசத்தல்

இந்திய வணிகம் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி

இந்தியாவில் கம்யூட்டர் செக்மென்ட் பைக்ஸ்களை விற்பனை செய்வதில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை அடித்து கொள்ள ஆள் இல்லை என்றே சொல்லலாம். ஆனாலும் இந்த செக்மென்ட்டில் ஹீரோ நிறுவனத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) சமீபத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஹோண்டா நிறுவனம் கடந்த ஆண்டு 100சிசி என்ஜினுடன் கூடிய Honda Shine 100-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த பைக்கை அறிமுகப்படுத்திய ஒரே வருடத்தில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட யூனிட்ஸ்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் Shine 100 பைக்கானது, ஹீரோ நிறுவனத்தின் Splendor Plus மற்றும் HF Deluxe பைக்ஸ்களுக்கு நேரடி போட்டியாக இருந்து வருகிறது. அதே நேரம் பஜாஜ் நிறுவனத்தின் Platina 100 பைக்கிற்கும் Shine 100 கடும் போட்டியை அளித்து வருகிறது.
இந்த நிலையில் ஒரே ஆண்டில் 3 லட்சம் யூனிட் விற்பனை என்ற மைல்கல்லை நாடு முழுவதும் மெகா டெலிவரி ஈவன்ட்ஸ்களுடன் ஹோண்டா நிறுவனம் கொண்டாடியது. என்ட்ரி-லெவல் கம்யூட்டர் செக்மென்ட்டில் நிறுவனத்தின் Shine 100 பைக்கானது எளிமையான ஸ்டைலிங், நம்பகமான செயல்திறன் மற்றும் ஈர்க்கக்கூடிய எரிபொருள் திறன் உள்ளிட்ட பல அம்சங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திருக்கும் தயாரிப்பாக இருக்கிறது. மேலும் ஹோண்டா நிறுவனத்தின் சேல்ஸ் & சர்விஸ் நெட்வொர்க் இந்தியாவில் 6,000 டச் பாயிண்ட்ஸ்களுக்கு மேல் கொண்டு நிறைவான ஓனர்ஷிப்-சைக்கிளுக்கு உறுதியளிக்கிறது.
ஹோண்டா ஷைன் 100 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.64,900 ஆகும். இந்த பைக்கின் விற்பனை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அதிகளவு இருக்கிறது. ஹோண்டா நிறுவனம் ஷைன் 100-க்கு 10 வருட வாரண்டி பேக்கேஜை வழங்குகிறது, இதில் மூன்று வருடங்கள் ஸ்டாண்டர்ட் மற்றும் ஏழு வருடங்கள் ஆப்ஷனல் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *