மனிதனுக்கு தேவை கட்டாயம் 7.5 மணி நேர உறக்கம் – தூக்கமின்மையால் வரும் ஆபத்துகள், ஓர் ஆதிர்ச்சி ரிப்போர்ட்

ஆரோக்கியம் உலகம் செய்திகள் மருத்துவம்

மனிதனுக்கு உறக்கம் மிக அவசியம். இன்றைய அவசர காலட்டத்தில் உறக்கம் என்பது அரிதாகிவிட்டது. அப்படியே உறங்கினாலும் மிக குறைந்த நேரமே உறங்ச் செல்கிறோம். அவ்வாறு குறைந்த நேரம் உறங்கினால் என்ன ஆபத்து, எவ்வளவு நேரம் சராசரியாக உறங்க வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்.
மனிதன் சராசரியாக 7.5 மணி நேரம் உறங்க வேண்டும் என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. ஆனால் உலகளவில் யாரும் அவ்வளவு நேரம் உறங்கவில்லை என்பதே வருத்தமான செய்தியாகும். உலகளவில் ஜப்பானியர்கள் 5 மணி நேரம் மட்டுமே உறங்குவதாக கூறப்படுகிறது. ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் 5 மணி நேரம் மட்டுமே உறங்குவதால் அதிக சதவிகித மக்கள் மன அழுத்தம் போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்கொலைகள் அதிகரிக்கவும் தூக்கமின்மை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்தியர்கள் சராசரியாக 6.20 மணி நேரம் உறங்குவதாக ஆய்வு கூறுகிறது. இது மற்ற நாடுகளில் வசிக்கும் மக்களை நேரக் கணக்குடன் ஒத்துப்போகிறது. இருப்பினும் 7.5 மணி நேரம் உறங்குவதே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இரவு 8 மணிக்கு உறங்கச் சென்று அதிகாலையில் எழுவது சிறந்தது என கூறுகிறார்கள். முன்னதாக படுக்கைக்கு சென்று முன்னதாக எழ வேண்டும் என முன்னோர்கள் கூறுவது போல உறங்கும் நேரம் அமைய வேண்டும். உறங்கும் நேரத்தில் தான் மூளை, இதயம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் துல்லியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் உறங்கும் நேரத்தில் தான் உடல் அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு நாளில் நடந்த சம்பவங்களை சரிவரி நினைவில் கொள்ளமுடியவில்லையென்றால் தூக்கமின்மை காரணம் என உறுதியாக கூறமுடியும்.
இன்றைய காலகட்டத்தில் உறக்கம் என்பது வீலையுயர்ந்த பொருளாகப் பார்க்கப்படுகிறது. இதனை ஒரு வணிகமாகவே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். தூக்கத்த கண்காணிக்க பல இயந்தரங்கள் வரத் தொடங்கிவிட்டன. இது 2026ம் ஆண்டுகள் உலக வணிகத்தின் பெரும்பங்கினை ஆக்கிரமிக்கும் என அதிர்ச்சித் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *