1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும் உரியப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் சாலைகளில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றோர் இதில் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும்.
இவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை இல்லையென்றாலும் அதைப் பெறுவதற்கும் இந்தத் திட்டம் கிடைக்கவும் உதவி செய்ய வேண்டும். தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் இந்தத் திட்டத்தைக் கண்காணித்து ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழு இதற்கான பணிகளைச் செய்யும். இதன் மூலம் மாநிலத்தில் இருக்கும் பெண்களின் நிதி நிலை மாறும்” என்று அவர் தெரிவித்தார்.