நாடு முழுவதும் அதானி விவகாரம் பேசப்படுகிறது. ஜனாதிபதி உரையில் வேலைவாய்பின்மை என்ற வார்தையே இல்லை. அனைத்து தொழில்களிலும் அதானி புகுந்து விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு தான் அதானி அதிகமாக வளர்ச்சி அடைந்தார். உலக பணக்கார பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு அதானி வந்தார். 8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பில் இருந்து, அவரது சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலர் அளவிற்கு சொத்து உயர்ந்தது. அதானிக்காக சட்டம் வளைக்கப்பட்டுள்ளது. அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு?. மக்கள் அதனை தெரிய விரும்புகின்றனர். அனைத்து வணிகத்திலும் அதானி வெற்றி காண்பது குறித்து மக்கள் வியப்பு தெரிவித்தனர். இவ்வாறு ராகுல் காந்தி பாராளுமன்ற மக்களவையில் பேசினார்.