கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லத்தில், வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி இல்லமான கரூர் ராமகிருஷ்ணபுரம் இரண்டாவது தெரு பகுதியில் உள்ள அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னை, கோவை மற்றும்கரூர் பகுதியில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர், ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் பகுதிக்கு, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் ஆதரவாளர்கள் வந்துள்ளனர்.
வருமான வரி சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் இருந்த லேப்டாப் எடுப்பதற்காக வந்த போது 100க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வெளியே போங்கள் என்று கூச்சலிட்டு தள்ளி விடுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் ஒரு காவல்துறை கூட சம்பவ இடத்திற்கு வராதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.