இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வ பயணமாக கனடா சென்றுள்ள நிலையில், கனேடிய அமைச்சர் மேரி என்ஜி- உடனான சந்திப்பின் போது ஒரே தகுதி உடைய இரட்டை பட்டப் படிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
“இரட்டைப் பட்டங்கள், தொழில்முறை அமைப்புகள் முழுவதும் எங்கள் கல்வித் தகுதிக்கான பரஸ்பர அங்கீகாரம் அளிப்பது ஆகியவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன,” என்றும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், இரட்டைப் பட்டங்கள் மற்றும் கல்வித் தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிப்பது குறித்து விவாதித்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை புதன்கிழமை தெரிவித்துள்ளது. இரு நாட்டு இளைஞர்களும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் வளாகங்களை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய அமைச்சர் கனடாவில் இருந்து முதலீடுகளை வரவேற்று பேசுகையில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க கனேடிய வர்த்தகர்களுக்கு அழைப்புதல் விடுத்தார்.