உலக அளவில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கு பெரிய அளவில் பயன்படும் பொதுப் போக்குவரத்து என்றால் அது ரயில் போக்குவரத்து தான். அப்படிப்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு சுவாரஸ்யங்கள் ஒளிந்திருக்கின்றன. அந்த வரிசையில் ரயில் நிலையங்களும் இணையும். அப்படி உலகிலேயே மிகப் பெரிய ரயில்நிலையம் பற்றித் தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
உலகெங்கிலும் பல ரயில் நிலையங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனக்கென சில சிறப்புகளைக் கொண்டுள்ளன. அப்படி பார்க்கையில் உலகின் மிக நீளமான நடைமேடை கொண்ட ரயில் நிலையம் நம் இந்தியாவில் உள்ளது. கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளி ரயில் நிலையத்தில் உலகின் மிக நீளமான நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை அந்த நடைமேடையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த நடைமேடையின் நீளம் 1,507 மீட்டர். கிட்டத்தட்ட ஒன்றை கிலோமீட்டர் நீளம். அதே போல் நம் நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது என்று கேட்டால், அது ஹவுரா சந்திப்பு. இங்கு 26 நடைமேடைகள் உள்ளன.
