பிப்ரவரி 14ஆம் தேதியை பசுமாடுகளை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட இந்திய விலங்குகள் நலவாரியம் விடுத்த அறிவிப்பை திரும்ப பெறப்பட்டது.
Cow hug day குறித்து விலங்குகள் நலவாரியம் வெளியிட்ட அறிக்கையில், “பசுக்களை காமதேனு எனவும் கோமாதா என அழைப்பதற்கு காரணம் மனித சமூகத்திற்கு பசு தாய் போல் செயல்படுகிறது. மேற்கத்திய நாட்டு கலாச்சாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருகிறது. நம் கலாச்சாரமும் பண்பாடும் மறக்கக்கடிக்கப்பட்டது.
பசுக்களில் பல பலன்கள் தருவதால், பசுவை கட்டிப்பிடிப்பது மனரீதியான வளத்தை அதிகரிக்கும். இதனால் தனிநபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எனவே பசு மீது நேசம் கொண்டவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள்.என குறிப்பிடப்பட்டிருந்தது. இணையத்தில், சமூக வலைதளத்தில் கேளிக்கு உள்ளானதால் இவ்வறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.