T20 உலககோப்பையில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் விளையாட்டு

உலககோப்பையின் 35 வது லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் மோதின. இரு அணிகளுமே கட்டாயம் வெற்றி பெற்றால் தான் அது அரையிறுதி செல்ல முடியும் என்ற நிலையில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலியின் கே.எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து பிரமாதமாக ஆடினார். இந்தத் தொடரில் தடுமாறி வந்த கே.எல் ராகுல் இன்று அற்புதமாக ஆடி 31 பந்துகளில் அரைசதம் அடித்து அடுத்த பந்திலே ஆட்டம் இருந்தார். இதன் பிறகு வந்த சூரியகுமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடிய கோலி 44 பந்துகளில் 66 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது.185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய பங்களாதேஷனுக்கு லிட்டன் தாஸ் அபார தொடக்கம் தந்தார். அதிரடியாக ஆடிய அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.7 ஓவர் முடிவில் 66 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. மழை நின்ற பின் ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.மீண்டும் தொடங்கிய ஆட்டத்தின் 2வது பந்திலே லிட்டம் தாஸ் 60 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார் இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி ஓவரில் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை வீசிய இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது அடுத்த நடைபெறும் ஜிம்பாபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு முன்னேறும். தோல்வியடைந்த பங்களாதேஷ் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கி உள்ளது மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை வைத்தே அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *