அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணைநிலை கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் என்பவர் பொறுப்பேற்று கொண்டார். இவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார். இந்த மாகாணத்தின் கவர்னராக பதவியேற்று கொண்ட முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்தவர் அருணா மில்லர். பொறியாளரான இவரது தந்தை ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்ததாக தெரிகிறது. அருணா 7 வயதாக இருக்கும் போது, தந்தையின் பணிநிமித்தம் காரணமாக பெற்றோருடன் சென்று அமெரிக்காவில் குடியேறினார்.
கடந்த நவம்பர் மாதம் மேரிலாண்ட் மாகாண துணை நிலை கவர்னருக்கு பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அருணா மில்லர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்று கொண்டார்.
மேரிலாண்ட் மாகாணத்தின் துணை நிலை கவர்னரான முதல் இந்தியர், முதல் பெண், பெருமையும் அருணாவுக்கு கிடைத்துள்ளது.