இந்திய வம்சாவளி பெண் அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஜூலி ஏ.மாத்யூ, அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இரண்டாவது முறை தேர்வாகி உள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஜூலி ஏ.மாத்யூ அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார். அங்கு வியாபாரம் செய்து வந்த அவரது தந்தைக்கு ஏற்பட்ட சட்ட ரீதியான பிரச்னைக்கு உதவ சட்டம் பயில ஜூலி முடிவு செய்தார். இவர் 15 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், போர்ட் பெண்ட் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக ஜூலி ஏ.மாத்யூ தேர்வானார். நீதிபதி பதவிக்கு தேர்வான முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை ஜூலி பெற்றார். இந்நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜூலி ஏ.மாத்யூ, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பதவி ஏற்றுக் கொண்டார்.