கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

உலகம் கனடா

சமீபகாலமாக கனடா நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டொரண்டோ நகர சுரங்க இரயில்பாதையின் நுழைவு வாயிலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாசுதேவ் என்னும் அந்த மாணவர் கனடாவில் நிர்வாகவியல் படித்து வந்தார். அவர் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார், யாரால் கொல்லப்பட்டார் என்பது இது வரை அறியப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. மாணவனின் தந்தை கூறுகையில்” கனடா மிகவும் பாதுகாப்பான நாடு எனக் கூறி தான் அவன் அங்குச் சென்றான். அவனின் மரணத்திற்கு நீதி வேண்டும்”, என தெரிவித்தார். இது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.