இந்தியர்கள் பல நாடுகளில் வாழ்கின்றனர். வேலை நிமித்தமாகவும், படிப்பு, வணிகம், போன்றவற்றிக்கு செல்லும் இந்தியர்கள் அங்கேயே குடியுரிமைப் பெற்று அந்நாட்டு குடிமக்களாகவும் வாழ்கிறார்கள். இவ்வாறு வாழும் இந்திய மக்கள் கார், நிலம், வீடு, தங்கம் என்று மதிப்பு உயரும் விஷயங்களில் முதலீடு செய்கின்றனர். சமீக காலகட்டத்தில் வெளிநாடுகளில் இந்தியர்கள் அங்கே வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் வீடுகள் வாங்கலாம் என்பதை சற்று விரிவாக பார்க்கலாம். துபாய், யுஏஇ யில் தங்கியிருக்கும், அல்லது நீண்ட நாட்கள் வாழும் இந்தியர்கள் அங்கே தாராளமாக வீடுகள் வாங்கலாம். அன்னிய நாட்டு குடிமக்கள் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்ய எந்த தடையுமில்லை. அதேபோன்று இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வீடுகள் வாங்க எந்த தடையும் இல்லை. அந்நாட்டு சட்டங்கள் இதை அனுமதிக்கின்றன.
இங்கிலாந்து நாட்டில் குறிப்பாக லண்டன் நகரில் இந்தியர்கள் வீடுகள் வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இன்னும் சொல்லப்போனால் அங்குள்ள உள்ளூர்வாசிகளை விட அதிகமாக இந்தியர்களே சொத்து வாங்குகிறார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 2.5 கோடி முதல் 4.0 கோடி வரை மதிப்பிலான வீடுகளை வாங்க இந்தியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.