இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் கடுமையான கலவரம் மூண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் தங்கள் விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளுன்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள இந்தியர்கள் தொடர்பான விவரங்களை புதுப்பிக்கும் முயற்சியில் இந்த தகவல்களை கோருவதாக இந்தி துணை தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. ஆன போது இலங்கையின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது.